ரணில் – சஜித் கட்சிகள் ஒன்றிணைவது நல்லது! – மனோ அணி தெரிவிப்பு.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் ஓரணியில் திரண்டாதல் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எதிரணிகள் ஒன்றிணைவதற்குரிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் அதனைச் செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுக்கும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.

தவறிழைக்கப்பட்டால் நிச்சயம் அவற்றை எதிர்ப்போம். மக்கள் வாக்களிக்கும் வரை அரசியலில் ஈடுபடும் எண்ணத்துடன்தான் இருக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.