யாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்.
யாழ்ப்பாணத்தில் மின் அழுத்தியைப் பயன்படுத்திய போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், உடுவில் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் ஜதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
மேற்படி இளைஞர் குளித்துவிட்டு வந்து உடலில் ஈரத்துடன் மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.
இதையடுத்து, வீட்டில் இருந்தோர் இளைஞரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
