ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டும்! – சஜித் மீளவும் வலியுறுத்து.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதியான விசாரணையைக் கோருகின்றனர். எனினும், நிலைமை தற்போது பாரதூரமாகியுள்ளது.

ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் கலந்துரையாடலில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றின் தந்தை, சூம் தொழில்நுட்பம் மூலம் இணைந்து கொண்டு, இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற விடயங்கள் நாட்டுக்குப் பொருத்தமில்லாத விடயங்கள் என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.