போர்த்துக்கல் ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா தலைமையிலான குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல் நடைபெற்றது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்.



