வயோதிபப் பெண்ணொருவர் பஸ் மோதி பரிதாப உயிரிழப்பு.

வீதியில் நடந்து சென்ற வயோதிபப் பெண்ணொருவர், பஸ் மோதி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கம சந்திக்கு அருகில், காலியில் இருந்து ஹிக்கடுவை நோக்கிச் சென்ற பஸ் மோதியதில் இந்தப் உயிரிழந்துள்ளார்.

காலியில் இருந்து ஹிக்கடுவை நோக்கிச் சென்ற பஸ், நடைபாதையில் சென்று கொண்டிருந்த பெண் பாதசாரி மீது நேற்று மோதி விபத்துக்குள்ளானதில் அந்தப் பெண் காயமடைந்தார். அவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த பெண், பூஸா பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் எனபி பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் காலி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.