ரயில் மோதியதில் இயந்திரம் பகுதியில் சிக்கிய பெண் படுகாயங்களுடன் மீட்பு!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் அந்த ரயிலின் இயந்திரம் பகுதியில் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்

இந்த விபத்து ஹட்டன் – மல்லியப்பு சந்திக்கு அருகில் இன்று மதியம் 1:30 மணியளவில் இடம்பெற்றது.

ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள மல்லியப்பு சந்திக்கு அருகில் உள்ள பிரதான ரயில் சாலையில் இருந்து ரயில் வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண், கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து காரணமாக ரயிலில் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க நேரிட்டது என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.