யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா வெள்ளியன்று மாவட்ட செயலகத்தில்…

யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பேரவையும், மாவட்ட செயலகமும், இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடத்தும் இந்தப் பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட செயலகத்தில் நாளைமறுதினம் மதியம் ஒரு மணியளவில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட செயலக முன்னாள் செயலர் இமல்டா சுகுமார் கலந்துகொள்ளவுள்ளார்.

பண்பாட்டு ஊர்வலத்துடன் நிகழ்வு ஆரம்பமாகி தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெறும். அத்துடன் “யாழ்ப்பாணம்” நூல் வெளியீடும் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.