நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இன்று புதன்கிழமை காலை ஆரம்பமாகியது.

அலங்கார உற்சவத்தில் விசேட திருவிழாக்களாக எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை பாம்புத் திருவிழாவும், 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கப்பல் திருவிழாவும், 8 ஆம் திகதி புதன்கிழமை வேட்டைத் திருவிழாவும், 9ஆம் திகதி வியாழக்கிழமை சப்பறத் திருவிழாவும்,10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவும், 11ஆம் திகதி சனிக்கிழமை கேணித் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.