வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியேற்றார் இந்திக்க கப்பு கொட்டுவ.

வவுனியா மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இந்திக்க கப்பு கொட்டுவ, மதத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்டு வந்த சாமந்த விஜயசேகர மேல் மாகாணத்தின் தெற்கு பிரிவுக்குப் பொறுப்பாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபராக போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டு வந்த இந்திக்க கப்பு கொட்டுவ நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போது மதத்தலைவர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலையங்களின பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.