வவுனியா இளைஞர்கள் இருவர் குருநாகல் விபத்தில் உயிரிழப்பு!
குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குருநாகல், நாரம்மல, அலஹிட்டியாவ, ஹொரம்பாவ – மாவி எல வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று தொலைதொடர்பு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அவர்கள் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
வவுனியா மற்றும் நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிரையில், இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
