மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!
மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
வத்தளை, மாபோல பகுதியில் மூன்று மாடிக் கட்டடத்தின் மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி நபர் மூன்று மாடிக் கட்டடத்துக்கு அருகிலுள்ள மின் கம்பி அமைப்பால் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
