சங்குப்பிட்டியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!
கிளிநொச்சி, பூநகரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குப்பிட்டிக் கடல் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இளம் பெண் ஒருவருடைய சடலம் கரையொதுங்கியுள்ளது.

மேற்படி பெண் இறந்து மூன்று நாள்களாகி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் இதுவரை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
