அனுராதபுரம் வாகன விபத்தில் ஒருவர் பலி! மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில்!!

அனுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹநெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கெப்பித்திகொல்லேவ நோக்கிப் பயணித்த கப் வாகனம் ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரின் சாரதியும், அதில் பயணித்த இருவரும், கப் வாகனத்தின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கார் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எடவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கெப்பித்திகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.