யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் வைத்தியசாலைப் பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் 1987ஆம் ஆண்டு உயிர்நீத்த சாரதி வை.சண்முகலிங்கத்தின் நினைவாக அவரது மனைவி, சக்கர நாற்காலி ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.