போனஸ் ஏமாற்றம்: பரிசாகக் கொடுத்த சோன்பப்டியை நிறுவன வாசலில் வீசிய தொழிலாளர்கள்!

தீபாவளி போனஸ் வழங்காத கோபத்தில் பரிசாக கொடுக்கப்பட்ட சோன் பப்டியை தொழிலாளர்கள் தூக்கி வீசியுள்ளனர்.

தொழிலாளர்களின் செயல்
இந்திய மாநிலமான ஹரியானா, சோனிபட் மாவட்டம், கனவுர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவில்லை.

அதற்கு பதிலாக தொழிலாளர்களுக்கு சோன் பப்டி இனிப்பு பெட்டியை தீபாவளி பரிசாக நிறுவனம் வழங்கியுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் நிறுவனத்தின் வாயிலில் இனிப்பு பெட்டியை தூக்கி வீசினர்.

தீபாவளி போனஸ் வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்திருந்த நிலையில் போனஸ் வழங்காமல் எங்களை ஏமாற்றி விட்டனர் என்கின்றனர் தொழிலாளர்கள்.

இதனால் அவர்களது எதிர்ப்பை பதிவு செய்ய இனிப்பு பெட்டியை நிறுவனத்தின் வாயிலில் தூக்கி வீசியதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.