யாழில் ஒரே நாளில் போதைப்பொருளுடன் 14 பேர் சிக்கினார்கள்!
யாழ். குடாநாட்டில் ஒரே நாளில் 14 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 பேர் நேற்று போதைப்பொருள்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் பொலிஸாரினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 38 வயதுக்கு உட்பட்டவர்களாகக் காணப்படும் அதேநேரம் ஒருவர் 16 வயது சிறுவனாகவும் உள்ளார் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேபோல் யாழ். குடாநாட்டில் 3 தினங்களுக்கு முன்பும் 11 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
