4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் நாளை புதன்கிழமை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.