19 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் 10 மாதங்களில் நாட்டுக்கு வருகை.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 78 ஆயிரத்து 557 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 20 ஆயிரத்து 33 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 21 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவில் இருந்து ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 594 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 938 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து ஒரு இலட்சத்து 11, ஆயிரத்து 998 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸில் இருந்து 93 ஆயிரத்து 104 சுற்றுலாப் பயணிகளும், ஆஸ்திரேலியாவில் இருந்து 84 ஆயிரத்து 606 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்தில் இருந்து 55 ஆயிரத்து 444 சுற்றுலாப் பயணிகளும் , அமெரிக்காவில் இருந்து 51 ஆயிரத்து 862 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ள னர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.