சரித ரத்வத்தே இன்று கைது!
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உரிய நடைமுறையை மீறி 2015ஆம் ஆண்டில் எந்தவொரு அவசியமும் இன்றி அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 9 கோடி ரூபாவுக்கும் அதிக நிதியைச் செலவிட்டு 50 தற்காலிக நெல் களஞ்சியங்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
