சரித ரத்வத்தே பிணையில் விடுவிப்பு!

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தேவைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று மாலை உத்தரவிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த காலத்தில் அவரது சிரேஷ்ட ஆலோசகராக சரித ரத்வத்தே பணியாற்றியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 50 நெல் களஞ்சியசாலைகளுக்குச் சட்டவிரோதமாகப் பொருட்களை இறக்குமதி செய்து அரசாங்கத்துக்கு 9 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சரித ரத்வத்தே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.