தென்மராட்சியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 3 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினைத் தனது உடமையில் வைத்திருந்த வரணிப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.