தமிழ் மக்களை ஏமாற்றிய அநுர பாதீடு குறித்து கடும் தீர்மானம் எடுக்கவுள்ளது தமிழரசுக் கட்சி.

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது. எனவே, வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எமது கட்சியால் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உட்பட தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சு நடத்துவதற்கு நேரம் கோரி இருந்தோம். கடந்த மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அதற்குரிய பதில் ஜனாதிபதி தரப்பில் இருந்து இன்னும் வழங்கப்படவில்லை.

தமிழரசுக் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியாகும். அந்தக் கட்சியால் வழங்கப்பட்ட கடிதத்துக்கு ஜனாதிபதி ஒருவர் பதில் வழங்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே, வரவு – செலவுத் திட்டம் பற்றி நாமும் காத்திரமானதொரு முடிவை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.