ரயிலில் மோதி ஆண் ஒருவர் மரணம்!
ரயிலில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் களனி – வனவாசல பகுதியில் உள்ள ரயில் கடவையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாலம்பே – கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
