திருகோணமலையில் கசிப்பு உற்பத்தி: தப்பியோடியவர் ஆற்றில் மூழ்கிப் பலி!

திருகோணமலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களைச் சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்ட வேளை ஆற்றில் இறங்கி தப்பியோடியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா, உப்பாறு – களப்பு பகுதியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் நேற்று வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்தி இடம்பெறுகின்றது எனக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த இடத்தைச் சுற்றி வளைத்த போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில், சிறிய படகு , அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் , கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுத்தப்பட்ட உபகரணங்கள், 70 லீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டன.

இதேவேளை, நேற்று ஆற்றில் இறங்கி தப்பியோடியவர் காணாமல்போன நிலையில், இன்று ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.