யாழில் போதை மாத்திரைகளுடன் இன்றும் ஒருவர் வசமாகச் சிக்கினார்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆயிரம் போதை மாத்திரைகளும் இரண்டு கிலோ 420 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவாவும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

இருபது வயது மதிக்கத்தக்க மேற்படி சந்தேகநபர், கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக உடுவிலில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.