யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 520 கிலோ இறைச்சி மீட்கப்பட்டுள்ளது

நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 520 கிலோ கிறாம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதுடன், இறைச்சிக்காக வெட்டுவதற்கு வெட்ட தயாராக கட்டி வைத்திருந்த 3 மாடு, 2 ஆடு போன்றவையும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக அப்பகுதி பொது மக்களால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இத்தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்கு மாநகர சபை ஊழியர்களுடன் சென்ற பொது சுகாதார பரிசோதர்கள் அப்பகுதி பொது மக்களுடன் இணைந்து இறைச்சி வெட்டப்படும் இடத்தினை முற்றுகையிட்டனர்.

இதன் போது 520 கிலோ கிறாம் மாட்டிறைச்சி, 3 மாடு, 2 ஆடு போன்றவற்றை மீட்டுள்ளனர்.

குறித்த இடத்திற்கு யாழ் மாநகர சபை பதில் முதல்வர் து.ஈசனும் சென்று ஆராய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.