கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுப்பதற்கான வீட்டிற்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில், ஜே183 கிராம சேவையாளர் பிரிவில் சகோதர இனத்தைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரின் நிதியுதவியுடன், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ரூவான் வணிகசூரிய இன்று வீட்டிற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நன்கொடை நிதி 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவில், இராணுவத்தினரின் பங்களிப்புடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த வீடு நீர்மானித்து வழங்கப்படவுள்ளது.

இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றான வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில், இந்த கணவனால் கைவிடப்பட்ட குடும்பத்திற்கு இந்த வீடு அமைத்துக் கொடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், இராணுவ அதிகாரிகள் மற்றும், குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Comments are closed.