கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபச் சாவு! – இருவர் படுகாயம்.

கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா, கரமட விகாரைக்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்தில் சிறுமி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடை மீது மோதியுள்ளது.

அத்துடன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ ஒன்றையும் அந்த பஸ் மோதித் தள்ளி முன்சென்று, வீடொன்றின் மதில் மீது மோதி நின்றுள்ளது.

கடையில் இருந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஐந்து வயது சிறுமி மற்றும் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.