திருலையில் கோர விபத்து இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்!

திருகோணமலை, ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இன்று தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் 10 ஆம் கட்டைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்ற இளைஞர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கபுகொல்லாவ – ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் (19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.