யாழ். நகரில் நீரிழிவு தின நடைபவனி.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக காலை 6.30 மணியளவில் இந்த நடை பவனி ஆரம்பமானது.
இந்த நடைபவனியில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்
இந்த நடைபவனி கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.












