அரசாங்க ஊழியர்கள் மீது அரசு கடும் அடக்குமுறை! – நாமல் எம்.பி. குற்றச்சாட்டு.

அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையில் அநுர அரசு ஈடுபட்டு வருகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்தக் காலக்கட்டம் சவாலானது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை பொலிஸ் துறை முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சரிந்துவிட்டது.

அரசால் விதிக்கப்பட்ட அதிக வரிச்சுமையால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

இந்த அரசால் அநீதி இழைக்கப்பட்டதாக உணரும் அனைவரையும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் எதிர்க்கட்சிப் பேரணியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இது யாரையும் ராஜாவாக்கும் போராட்டம் அல்ல, மாறாக மக்கள் சார்பாக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்யும் போராட்டப் பேரணி.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.