தம்பதியினர் சுட்டுக்கொலை! – தங்காலையில் பயங்கரம்.
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.
இன்று மாலை 6.15 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
9 மி.மீ. ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
68 மற்றும் 59 வயதுடைய கணவன் மற்றும் மனைவியே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
