ஐஸ் போதைப்பொருளுடன கிராம அலுவலர் சிக்கினார்!

ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கிராம உத்தியோகத்தர் கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் மீரிகம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரிகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரான கிராம உத்தியோகத்தர் மீரிகம – ஹலுகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீரிகம – நெலிகம பகுதி கிராம உத்தியோகத்தர் ஆவார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மீரிகம பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.