ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை 3 நாள்களுக்கு இல்லை! – புதிய திகதிகள் அறிவிப்பு.
இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை மூன்று நாள்களுக்கு நடைபெறாது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (நவம்பர் 27), நாளை (நவம்பர் 28) மற்றும் நாளைமறுதினம் (நவம்பர் 29) ஆகிய மூன்று தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
மேற்படி மூன்று நாள்களிலும் நடைபெறவிருந்த பரீட்சைகள் முறையே டிசம்பர் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஏனைய பரீட்சைகள் வழமை போல் நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
