மோசமான காலநிலையால் பதுளையில் 31 பேர் மரணம்!

பதுளை மாவட்டத்தில் அடை மழை, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, ஹிந்தகொட, மடுல்சிமை ஆகிய பகுதிகளில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மடுல்சீமை – பட்டாவத்த தோட்டத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய், மூன்று வயது சிறுவன் உள்ளிட்ட ஐவர் பலியாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.