யாழ். பண்ணைக் கடலில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் மரணம்!

யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பேர் நேற்று மாலை உயிரிழந்தனர்.

கொக்குவில் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஜெனீசன், உதயராஜா கஜந்தன் என்ற 18 வயதான இளைஞர்கள் இருவரே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பண்ணைக் கடலில் நீந்தச் சென்ற இளைஞர்கள் நால்வர் சுழியில் சிக்கி நீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த அந்தப் பகுதியில் நின்றவர்கள் பொலிஸாரின் உதவியுடன் நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதன்போது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.