சட்டவிரோத சொத்துக் குவிப்பு: யாழில் வீடொன்று முற்றுகை!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனொரு கட்டமாக மேற்படி நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.