பேரனர்த்தத்தால் பாதிப்படைந்த யாழ். – வவுனியா ரயில் பாதைகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்.
டித்வா புயல் மற்றும் மழை காரணமாகப் பாதிப்படைந்த ரயில் பாதைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை வவுனியா ரயில்வே திணைக்கள உத்தியோகத்தர்களும், இராணுவத்தினரும் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.
வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் பாதைகள் பல இடங்களில் வெள்ளம் காரணமாகப் பாதிப்படைந்துள்ளன.

இந்தப் பாதிப்படைந்த ரயில் பாதைகளைச் சீரமைத்து ரயில் சேவையை வழமைக்குக் கொண்டு வரும் வகையில் இந்த நடைவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக ரயில் தண்டவாளங்களைப் பழுது பார்த்தல் மற்றும் தண்டவாளங்களில் நீர் பாய்ந்த அரிக்கப்பட்ட இடங்களைச் சீர்செய்தல் போன்ற நடவடிக்கைகளை இராணுவத்தினரும், வவுனியா ரயில்வே திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து முன்னெடுக்கின்றனர்.
