இலங்கையில் மண்சரிவு அபாயம்: 2,377 இடங்களில் ஆய்வு ஆரம்பம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த தகவல்.

இலங்கையில் மண்சரிவு ஏற்படக்கூடிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள 2 ஆயிரத்து 377 இடங்களில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த இடங்கள் தொடர்பாக 529 இறுதி அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

மண்சரிவு ஏற்படக்கூடிய நிலையில் அடையாளம் காணப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய ஏழு மாவட்டங்களில் மொத்தம் 56 ஆராய்ச்சி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் நாடு முழுவதும் 1,322 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

செயற்கைக்கோள்களைப் படங்களைப் பயன்படுத்தி அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு இடங்களை அடையாளம் காணும் திட்டத்தையும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.