சபுகஸ்கந்த விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் கைது!

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் நேற்று இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் வாகனம் விபத்துக்குள்ளாகியிருந்தது.

அவரின் ஜீப் வாகனம் வீதியில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்திருந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இந்த விபத்தில் அசோக ரன்வல எம்.பியும் காயமடைந்திருந்தார்.

இன்று கைது செய்யப்பட்டுள்ள அவர், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.