மனைவியைக் கொலை செய்துவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட கணவன் – வவுனியாவில் அதிகாலை பயங்கரம்.

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் இன்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கருவேப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக மேற்படி பெண்ணை அவரின் கணவர் கொலை செய்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனைவியைக் கொலை செய்த பின்னர் கணவரும் கழுத்தை அறுத்துக்கொண்டார் எனவும், அவர் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.