இருநூறு கிலோ கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது! – பருத்தித்துறையில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை.

யாழ். பருத்தித்துறையில் 200 கிலோ கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கேரள கஞ்சா இருப்பதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நெல்லியடி பொலிஸாரால் அந்த வீடு முற்றுகையிடப்பட்டது.

இதன்போது கேரள கஞ்சாவுடன் இரண்டு ஆண்கள், ஒரு பெண் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேகநபர்களைப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.