மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமலே மீண்டும் களமிறங்கக்கூடும்! – இப்படிக் கூறுகின்றார் சாகர.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவே தமது கட்சி வேட்பாளராகக் களமிறங்கக்கூடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவே தற்போது கட்சிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடியே இறுதியான – உறுதியான முடிவை எடுக்கும்.” – என்றார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நாமல் ராஜபக்ஷ களமிறங்கி படுதோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஷவே மீண்டும் போட்டியிடுவார் என்று அக்கட்சி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
