அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகும் சரத் வீரசேகர

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர விரைவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சரத் வீரசேகர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

சட்ட அமுலாக்கல் குறித்த பொறுப்புகளுடனான அமைச்சராக அவர் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.