15 வயது மாணவி தீயில் எரிந்து சாவு! – வடமராட்சியில் சம்பவம்.

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – கொம்மாந்துறைப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தீயில் எரிந்து சாவடைந்துள்ளார்.

15 வயதான பார்த்தீபன் கபிஷ்னா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பரீட்சைப் பெறுபேறு தொடர்பில் வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, அந்த மாணவி தனக்குத் தானே தீவைத்துள்ளார்.

இதையடுத்து, ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சையின்போது நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.