வெளிநாட்டுப் பிரஜை கடலில் மூழ்கி மரணம்!

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவை – வேவல பகுதியில் உள்ள கடலில் மூழ்கியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 54 வயதான பெலாருஸ் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை ஹிக்கடுவை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு பலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் பலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.