ஜெய்சங்கர் நாளை இலங்கை விஜயம்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மீட்டெழ ஆரம்பிக்கப்பட்டுள்ள “ஓப்பரேஷன் சாகர் பந்து” திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதாக இந்தப் பயணம் அமையும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைப் பயணத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
