ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகப்போகிறது.

சமீபகாலமாகவே பிரபலங்களின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் அதிகமாக உள்ளன. தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் எனப் பலரது வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் இது போன்ற படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க விரும்புவதாக இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.

‘ரஜினியை வைத்து தான் எந்தப் படமும் இதுவரை இயக்கியதில்லை. ஆனால் அவருடைய தீவிர ரசிகர் என்பதால் அவருடைய வாழ்க்கையைப் படமாக்க விரும்புகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்படி தான் ரஜினியின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால் அதில் நடிகர் தனுஷ், ரஜினி கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும். ரஜினியின் ஸ்டைலும் தனுஷூக்கு நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என லிங்குசாமி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.