அன்று ஊடகங்களை எரித்தவர்கள் இன்று சுதந்திரம் பற்றி பேசுகின்றனர் – இப்படி அநுர அரசு பதிலடி.

அன்று ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றைக் கொளுத்தியவர்கள், இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது “சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசு ஊடக அடக்குமுறையைக் கையாள்வதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இது தொடர்பில் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் கொளுத்தப்பட்டன.

இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்கள் இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது நகைப்புக்குரிய விடயமாகும்.

எமது ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும். ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்குரிய உரிமைகள் நிச்சயம் பாதுக்காக்கப்படும்.

ஊடக நிறுவனங்கள் உண்மையை எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.