ஆற்றில் மூழ்கி மாணவன் சாவு! – இரத்தினபுரியில் சோகம்.

இரத்தினபுரி மாவட்டம், கலவானை – வெத்தாகலை ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

கலவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கட பகுதியில் உள்ள வெத்தாகலை ஆற்றில் நேற்றுமுன்தினம் சக மாணவர்களுடன் நீராடச் சென்ற மேற்படி மாணவன், எதிர்பாராத விதமாக ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கிக் காணாமல்போயிருந்தார். இந்நிலையில், பிரதேச மக்கள் இணைந்து அந்த மாணவனை நேற்றுச் சடலமாக மீட்டெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்த மாணவன் வெத்தாகலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.